தமிழ் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு முதல் அரசியல் பயணத்தை தொடங்கிய நிலையில், அவரது மக்கள் சந்திப்பு பயணம் 2026 பிப்ரவரி 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வரும் டிசம்பர் 20ஆம் தேதியுடன் இந்த பயணம் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய விஜய்யின் இந்த பரப்புரை பயணம், இதுவரை அரியலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளதுடன், வரும் சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

வாரம் ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் நடக்கும் பிரசாரத்தை, இப்போது ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரிவாக்க விஜய் திட்டமிட்டிருப்பது, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.