கலகத் தலைவன் திரைப்படத்தை தொடர்ந்து, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மாறன், இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் உதயநிதி நடித்துள்ளார். இதில், உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மார்ச்.17ல் படம் திரைக்கு வருகிறது.