தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் மற்றும் கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் லியோ படத்தில் பணிபுரியும் லோகேஷ் கனகராஜின் நண்பரும் இயக்குனருமான ரத்தினகுமார் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அவர் வெளியிடும் புகைப்படங்களை வைத்து விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் போன்றோர்  படங்களில் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் காஷ்மீரில் ஒரு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது வெளியிட்டு ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் இது நாயுடன் இருக்கும் சாதாரண புகைப்படம். இதை யாரும் டிகோட் செய்ய வேண்டாம் என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Rathna Kumar (@mr.rathna)