தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்தப் படத்திற்கு பிறகு திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் மற்றும் ராதாரவி போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த படமாக பகாசூரன் இருப்பதால் பெண்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பகாசூரன் படத்தின் வெற்றியை தற்போது படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மோகன் ஜி கே 5 லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.