தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் மற்றும் கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் லியோ படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் 30-ஆம் தேதி நிறைவடைவதாக தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து மொத்த படப்பிடிப்பும் மே மாதத்தின் இறுதிக்குள் நிறைவடைகிறதாம். மேலும் இதன் காரணமாக லியோ படத்தின் செலவு குறைய இருப்பதால் தயாரிப்பாளர் லலித் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது ‌