தமிழ் சினிமாவில்  ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்திற்கு பிறகு பல வித்தியாசமான படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்த உதயநிதி ஸ்டாலின் தற்போது கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்துள்ள நிலையில் ஆத்மிகா, மகிமா நம்பியார், வித்யா பிரதீப் மற்றும் அஜ்மல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் வீடியோவில் உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் ஒரு அழுத்தமான காரணம் இருக்கும் போன்ற மிரட்டலான வசனங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.