குடியிருப்புகள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக சென்னை குடிநீர் வாரியம் டேங்கர் லாரி மூலம் வழங்கும் குடிநீரின் விலை மாற்றப்பட்டுள்ளது. முன்பதிவு முறையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்ற நிலையில், பல கொள்ளளவுடைய லாரிகளுக்கான கட்டணங்களில் உயர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி குடியிருப்பு பயன்பாட்டிற்கான புதிய விலைகள்: 6,000 லிட்டர் கொள்ளளவு: ரூ.475 → ரூ.550 (₹75 உயர்வு) 9,000 லிட்டர் கொள்ளளவு: ரூ.700 → ரூ.825 (₹125 உயர்வு) 12,000 & 18,000 லிட்டர் லாரிகள்: மாற்றமில்லை
வணிகப் பயன்பாட்டிற்கான புதிய விலைகள்: 6,000 லிட்டர்: ரூ.735 → ரூ.1,025. 9,000 லிட்டர்: ரூ.1,050 → ரூ.1,535
இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது, “இந்த விலையேற்றம் தேவைக்கதிகமாக வாங்குவோருக்கானது மட்டுமே. சாதாரண பொதுமக்கள் அல்லது பொதுவான குடியிருப்பாளர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படமாட்டார்கள்,” என விளக்கம் அளித்துள்ளனர். மேலும் டேங்கர் லாரி தண்ணீரின் தேவை அதிகரித்து வரும் நிலையில், கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
