சென்னை மற்றும் சேலம் இடையே விமான சேவை 3 வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து நாள்தோறும் காலை 11.30 மணிக்கு சேலத்தில் இருந்து பகல் ஒரு மணிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்படுகின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் சேவையை தொடங்க முன்வந்துள்ள நிலையில் சென்னையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12.30 மணிக்கு சேலம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.