சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சியில் திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. திருச்சியில் 26 கி.மீ-க்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீ-க்கு ஒரு கட்டமாகவும் என 2 கட்டங்களாக மொத்தம் 45 கி.மீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான வாய்ப்பு இல்லை என்றும் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.