தமிழகத்தில் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டில் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று   விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் தற்போது தமிழகமெங்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனைகள் அமோகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் கரைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கில், மாசு கட்டுபாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி விநாயகர் சிலைகள் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.   ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகள் மட்டுமே தயாரிப்பு, விற்பனை, கரைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.