சென்னையில் டீ, காபி விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்போது கோயம்புத்தூரிலும் டீ, காபி விலைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பெரிய பேக்கரிகளில் டீ ரூ.20, காபி ரூ.26, பிளாக் டீ ரூ.17 என புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் தினசரி செலவில் பெரும் சுமையை சந்தித்து வருகின்றனர். எரிபொருள் மற்றும் பால் விலை உயர்வை தொடர்ந்து, காபி, டீ விலையும் உயர்ந்துள்ள நிலையில், இது சாதாரண மக்களின் அடிப்படை செலவுகளை மேலும் பாதிக்கும் என வியாபார சங்கங்கள் தெரிவித்துள்ளன.