சென்னையில் நாளை முதல் 18ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஓலா, ஊபர் உள்ளிட்ட கால்டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகையைக் குறைக்க வேண்டும், விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். டூ வீலர் டாக்சியை தடை செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
