வாக்குறுதியை நிறைவேற்ற ஏற்பட்ட தாமதத்தால் ஏற்கனவே ஏமாற்றத்தில் இருந்த தாய்மார்கள், திமுக அரசின் துரோக நடவடிக்கையால் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், மகளிர் அனைவருக்கும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், 1.60 கோடி விண்ணப்பங்களை பெற்று, அதிலும் 56 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டனர்.

திமுக அரசின் மோசடித்தனத்தை கண்டித்து கிராமப்புறங்களை அதிகம் கொண்ட விழுப்புரம் பெருங்கோட்ட பகுதியில், 18ஆம் தேதி முதல் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருவள்ளூர் பகுதிகளில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.