சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள்  நடைபெறும். இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். எனவே அங்குள்ள மக்களுக்கு மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியத்துறை சென்னை மக்களுக்கு அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னையின் அண்ணா சாலை பகுதியில் தாஜ் ஹோட்டல், டேட்டா சென்டர்,ஐஓபி வங்கி, கன்னர்மாறா ஹோட்டல், கனரா வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, மார்ஷல் சாலை, ராணி மெய்யம்மாள் விடுதி மற்றும் திருமண மண்டபம், பின்னி சாலை,சிட்டி பேங்க், இந்தியன் வங்கி பகான் கட்டிடம், சக்தி டவர்ஸ், எத்திராஜ் கல்லூரி, விசி சாலை, மாண்டித் சாலை, ஏர் இந்தியா, ஹோட்டல் காஞ்சி டிஎல்எப்ஃ இன் ஒரு பகுதி சிட்டி டவர் அண்ணா சாலையின் ஒரு பகுதி, கலைக்கல்லூரி, எக்ஸ்பிரஸ் அவென்யூ, கிளப் ஹவுஸ் சாலை, இபி காம்ப்ளக்ஸ், இபி லிங்க் சாலை, ரவி ரஹேஜா டவர், ஜிபி சாலை ஒரு பகுதி, வாசன் அவன்யூ, அண்ணா சாலையின் ஒரு பகுதி, ஐசிஐசிஐ வங்கி,ஐடிசி ஹோட்டல் அண்ணா சாலையில் உள்ள ஒயிட் சாலையின் ஒரு பகுதி போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பொன்னேரி பகுதியில் குருவியாகரம் மங்காபுரம், சோழியம்பாக்கம், பாலவாக்கம்,ஏனாதி மேல்பாக்கம், ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு, மெயின் ரோடு, வேர்க்காடு சி நகர், பாலகிருஷ்ணாபுரம், பெத்திக்குப்பம், ரயில்வே பாலம், ஜிஎன்டி சாலை ,டவுன் கும்மிடிப்பூண்டி, நத்தம் ,பெத்திக்குப்பம், கும்மிடிப்பூண்டி பஜார், புதிய ஜிபிடி, வேர்க்காடு, எழுமதுரை ஆரம்பாக்கம், நாயுடு குப்பம், கொண்டவநல்லூர், எட்டூர் சுன்னம்பு குளம், பெரிய குப்பம், ஒபுலாபுரம், எலாவூர், பெத்திக்குப்பம், சித்துராஜ கண்டிகை, சிந்தலகுப்பம், பாப்பான்குப்பம், கங்கன் தொட்டி, சிப்காட் பைபாஸ், சாலை, புதிய GPD, சிப்காட் தொழில் துறை வளாகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,பஞ்செட்டி, ஓபிஜி ,பிர்லா கார்பன் போன்ற பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.