சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜனவரி 28ஆம் தேதி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டு லாஸ் சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து திரு வி க சாலை சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணா சாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டு லா சாலை மற்றும் ஒயிட் சாலை சந்திப்பில் திரும்பி தங்களுடைய இலக்கை அடையலாம். அதனைப் போலவே அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை மற்றும் திருவிக சந்திப்பில் இருந்து பட்டு லா சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.