செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, MGR மறைந்த பின்பு மலர் வளையம் வைத்து மரியாதை செய்ய நாங்க வெயிட் பண்ணி நின்னுட்டு இருந்தோம். தலைவர் பீரங்கி வண்டியில் வச்சதும் அழைச்சிட்டு போனார்கள்.

அப்போது அம்மா ஏறி வண்டியில இருக்கும் போது….  நான் கீழே நின்னுட்டு இருக்கேன். மேல அம்மா மலர் வளையம்  வைக்க போறாங்க. அப்போ எல்லாரும் என்ன பண்ணிட்டாங்க ? நம்ம கட்சியில வாரிய தலைவரா இருக்காங்க….  இவங்க எல்லாம் சேர்ந்து…  சில பேர் ஏவி விடுறாங்க அவங்களை….  எல்லாம் புடிச்சு தள்ளுங்க,  வைக்க வைக்காதீங்க  …. அப்படி எல்லாம் செஞ்சு அம்மாவை கீழ தள்ளிட்டாங்க.

அப்போ நாங்க கீழே இருந்து தூக்கி பிடிச்சு…. உடனே அங்க இருக்க வேண்டாம். போலீஸ் அதிகாரிகள் என்ன பண்ண முடியும்? ஒரு அரசாங்கத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. நீங்க இருந்தா இங்க உயிருக்கே ஆபத்து. நீங்க அம்மாவ அழைச்சிட்டு போயிடுங்க.  இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம்னு சொல்றாங்க. அதனால நாங்க அம்மாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டோம் என தெரிவித்தார்.