சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது. மலைப்பாங்கான பகுதியில் உள்ள மிகக் செங்குத்தான சாலை ஒன்றில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நழுவி ஆபத்தான நிலையில் தவித்துக்கொண்டிருந்தார்.

மேலும் பைக்கில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த இக்கட்டான தருணத்தில், அங்கிருந்த ஒரு நபர் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக உதவிக்காக ஓடிவந்து, பின்னோக்கிச் சரிந்த அந்த மோட்டார் சைக்கிளை லாவகமாகப் பிடித்து நிறுத்தினார். அவரது இந்த சாதுரியமான மற்றும் விரைவான செயலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

“>

இந்த வைரல் வீடியோ எக்ஸ் தளத்தில் என்ற பக்கத்தில் பகிரப்பட்டு, தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆபத்தில் இருந்தவர்களைக் காப்பாற்ற தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்த அந்த நபரின் மனிதாபிமானத்தையும் சமயோசித புத்தியையும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.