இந்திய ராணுவத்தில் வீரதீர செயல்களுக்காக “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கி கௌரவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டின் போது, பலத்த காயமடைந்த நிலையிலும் அசாத்திய துணிச்சலுடன் போராடி இரண்டு பயங்கரவாதிகளை இவர் வீழ்த்தினார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவரை அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவர் உயரிய விருது வழங்கிச் சிறப்பித்த நிலையில், தற்போது தமிழக அரசும் இந்த உயரிய கௌரவத்தை அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ராணுவ வீரரின் தியாகத்தைப் பாராட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது, வீரரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடிய முதலமைச்சர், அவரது குழந்தையைத் தனது கைகளில் வாங்கி மடியில் வைத்து மிகுந்த மகிழ்ச்சியோடு கொஞ்சி மகிழ்ந்தார்.
வீரதீர விருது வென்ற தமிழக ராணுவ வீரரை அழைத்து கௌரவித்த முதலமைச்சர் விஜய்… அவரது குழந்தையை கையில் வாங்கி மடியில் வைத்து கொஞ்சி மகிழ்ச்சி..!#KirtiChakra | #LanceNaikMeenatchiSundaram | #MeenatchiSundaram | #CMVijay | #PolimerNews pic.twitter.com/MiUvLXrZnt
— Polimer News (@polimernews) June 15, 2026
தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடிய தமிழக வீரரை முதலமைச்சர் நேரில் அழைத்து 48 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கி, அவரது குழந்தையைக் கொஞ்சிய இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
