தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து தற்போது கோடைகாலம் தொடர இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோடை காலத்தில் மாணவர்கள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீரைக் குடிப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில் பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை முறையை செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டிலேயே இந்த முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கேரளா  தான்.

இந்த திட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் காலை 10.30 மணிக்கும் மதியம் 2.30 மணிக்கும் இரண்டு முறை மணி அடிக்கப்படும். அந்த சமயத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். பருவநிலை மாற்றம் காரணமாக அம்மாநிலத்தில் வரலாறு காணாத வெப்பநிலை அதிகரித்துள்ளது.