நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் குறுக்கலையாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியனின் மகன் விஷ்ணு என்ற மாணவன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாதது குறித்து கூறியிருந்தார். மேலும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் .

இதனை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் 10 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இதனை நேற்று திறந்து வைத்துள்ளார் . இதுகுறித்து பேசிய அவர், “மாற்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து என்னால் முடிந்தவற்றை சொந்த பணத்தை வைத்து செய்து வருகிறேன். தற்போது காஞ்சனா நான்காம் பாகத்தில் நடிக்கிறேன். இதன் பிறகு பென்ஸ் படமும், கால பைரவா படத்திலும் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.