ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூன்று  கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் ‘போல்சர்வே.டாப்’ என்ற இணையதளத்தில் பாஜக தேர்தல் போனஸ் என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்தால் ரூ.5000 பரிசளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123 பிரிவின்படி குற்றமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.