தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையில் புதிய யுக்திகளை கையாண்டு வரும் வெற்றியாளர்களுக்கு சுற்றுலா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளதாகவும் சுற்றுலா விருது பெற விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா விருது சிறந்த சுற்றுலா வழிகாட்டி மற்றும் சுற்றுலா தளத்தை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்துதல், சமூக வலைத்தளங்களில் சுற்றுலா குறித்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

இந்நிலையில் சுற்றுலா விருது பெற விருப்பம் உள்ள நபர்கள் www.tntourismawards.com என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி சிறந்த சுற்றுலாத்துறை பயண வெற்றி அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.