கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானை இதுவரை யாரையும் தாக்கியது இல்லை. சில நேரம் வாகனங்கள் வந்தால் யானை சாலை விட்டு விலகி வனப்பகுதிக்குள் சென்று விடும்.

எனவே சுற்றுலா பயணிகள் யானையை பார்த்தால் சத்தம் போடுவது, ஹாரன்அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டாப்சிலிப் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுத்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.