திருச்சியில் திரையுலக நட்சத்திரமும், தமிழக அரசியலுக்குள் புதிய பாதையை வகுக்கும் தவெக தலைவர் விஜய், தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவெக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்று (செப்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில் தலைவர் விஜய் கூறியிருப்பதாவது, “மக்களிடையே தவெகவுக்கு கிடைக்கும் ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை பார்த்து பயந்துதான் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.…
— TVK Vijay (@TVKVijayHQ) September 9, 2025
“>
இது ஜனநாயகத்திற்கு எதிரானது. உடனடியாக ஆனந்த் மீது பதியப்பட்ட அந்த வழக்கை அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தவெக ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன.
