முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் டெல்லிக்கு பயணம் செய்த அவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, “ஒருங்கிணைந்த அதிமுகவாக மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க முடியும்” என வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவரது இந்த கருத்து கட்சியின் தற்போதைய உள்நிலை நிலைமையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இன்று பிற்பகலில் தமிழகம் திரும்ப உள்ள செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து, அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அவரையும் சந்திக்க உள்ளதாக பேச்சுகள் வெளிவந்துள்ளன.
இந்த முன்னேற்றங்கள், அதிமுகவின் எதிர்காலக் கூட்டணிப் பரப்புரைகளில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையன் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், அவரது அரசியல் செயல்பாடுகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி, தமிழ்நாடு அரசியலில் புதிய கலந்தாய்வுகளை உருவாக்கியுள்ளது.
