அண்மையில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரையுலகப் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக ஃபிலிம்பேர் விருது விழாவுக்கு வந்தபோது, நடிகர் தனுஷுடன் தான் வந்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.
அப்போது “சும்மா வா ஜாலியாகப் போய்விட்டு வருவோம்” என்று தனுஷ் தன்னை அழைத்து வந்ததாகவும், அந்த சமயத்தில் தமக்கு இரண்டாவது வரிசையிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது தனது கடின உழைப்பால் முதல் வரிசைக்கு முன்னேற தமக்கு 13 ஆண்டுகள் ஆகியுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் உலா வரும் நிலையில், பொது மேடையில் சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சு தனுஷ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால் தனுஷ் தான் சிவகார்த்திகேயனின் ஆரம்பகால வளர்ச்சிக்கு ‘எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’ போன்ற படங்களின் மூலம் உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷின் பெயரை மேடையில் குறிப்பிட்டுப் பேசியதன் மூலம், தங்களுக்குள் இருக்கும் நட்பை சிவகார்த்திகேயன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
