பெங்களூருவில் அமேசான் ஊழியர் ஒருவர், பெண் ஆட்டோ ஓட்டுநருடன் மேற்கொண்ட உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநர், “பாத்திரங்கள் கழுவுவதை விட ஆட்டோ ஓட்டுவது சிறந்தது; இது எனக்கு சுதந்திரத்தையும், விருப்பப்பட்ட நேரத்தில் வேலை செய்யும் நெகிழ்வுத்தன்மையையும் தருகிறது” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

மேலும் பெண்களின் இந்த சுயசார்பு மற்றும் தன்னிச்சையான முடிவை சமூக வலைதளப் பயனர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பெரும்பாலான பயனர்கள், வேலையை விட தன்மானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதையே அந்தப் பெண் தேர்வு செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shreyashiiii (@shree__yeahh)

“>

இந்நிலையில் பெங்களூரு போன்ற நகரங்களில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த துறைகளில், தற்போது பெண்கள் தைரியமாக நுழைந்து தங்களின் திறமையை வெளிப்படுத்துவது மற்ற பெண்களுக்கு ஒரு உத்வேகமாக மாறியுள்ளது.