நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களாக நிர்வாகிகள் ஏராளமானோர் விலகி வருகிறார்கள். அதாவது சீமான் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட திமுகவில் 3000 நிர்வாகிகள் இணைந்தனர். இன்று  செய்தியாளர்களை சந்தித்த சீமான் பிரபாகரன் வந்து சொன்னால் கூட நான் பெரியாரை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் பெரியாரை ஏற்கும் என்னுடைய தம்பிகள் தாராளமாக என்னை விட்டு விலகி செல்லலாம் என்றும் கூறினார்.

கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினர். இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். அதாவது அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 12 பேர் அந்த கட்சியில் இருந்து விலகினர். மேலும் அவர்கள் இன்று உதயநிதி முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகினர்.