தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாரதிராஜா. இவை இயக்கத்தில் வெளியான மண்வாசனை கலந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் 90களில் மிகச் சிறந்த நாயகிகளாக இருந்த பெரும்பாலானோர் பாரதிராஜாவின் மூலம்தான் அறிமுகமானவர்கள். பல முன்னணி இயக்குனர்களும் இவரிடம் தான் பாடம் கற்றுக் கொண்டனர்.

தற்போது பாரதிராஜா குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமா என்பது மிகப்பெரிய கலை பொக்கிஷம் என்று கூறியுள்ள இயக்குனர் பாரதிராஜா, அவரது இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான முதல் மரியாதை திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த பாரதிராஜா, சிவாஜி இல்லை என்றால் நான் இல்லை. இப்போது என்னை பலரும் நடிக்க அழைப்பது சிவாஜி எனக்கு போட்ட பிச்சை. அவருக்கு நான் கொடுத்த மரியாதை தான் முதல் மரியாதை என உணர்ச்சிகரமாக பேசினார்.