உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள நாக்லா மசானி பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில், நந்தி சிலைக்கு பக்தர்கள் பால் ஊட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் சவான் மாத சிவராத்திரி தினத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், மக்கள் தங்களின் கரண்டியில் பாலை ஊற்றி நந்தி சிலைக்குப் பால் குடிக்க வைக்கின்றனர். பால் சிலையின் வாயில் விழுவதால், நந்தி பால் குடிக்கிறதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பக்தர்கள் இதில் ஒரு அதிசயத்தை காண்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் பதான்கோட், ஹிமாசல்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலர் இதை பக்தியின் வெளிப்பாடாக பாராட்டினாலும், மற்றவர்களோ இது ஒரு மூடநம்பிக்கை என விமர்சிக்கின்றனர்.
अलीगढ़ में नंदी महाराज को दूध पिलाने का वीडियो सोशल मीडिया पर हो रहा वायरल !!
पत्थर के नंदी महाराज को लोग दूध पिला रहे, देहली गेट थाना इलाके के नगला मसानी का मामला !!#ViralVideo #Soshalmidia pic.twitter.com/CG33xCDC4i
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) July 23, 2025
“>
நந்தி சிலை பால் குடிக்கிறது என்ற நம்பிக்கையில், பெரியவர்களும் குழந்தைகளும் போட்டிபோட்டு பாலை ஊற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ‘ஹர் ஹர் மகாதேவ்’ கோஷங்கள் முழங்கும் நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி, சமூகத்தில் விவாதத்தையும், ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.
