உத்தரகாண்ட் மாநிலத்தின் புனிதமான திரியுகிநாராயண் ஆலயத்தில், மீரட்டைச் சேர்ந்த இளம் ஜோடி ஒன்று கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படும் இந்தத் தலத்தில், இயற்கை அன்னை பனிமழையை பொழிந்து ஆசீர்வதித்தது “கடவுள் கொடுத்த திருமணப் பரிசு” என இணையவாசிகளால் போற்றப்படுகிறது.

மேலும் பாரம்பரிய உடைகளுடன் குளிரைத் தாங்கும் வகையில் ஜாக்கெட் அணிந்திருந்த மணமக்கள், கோவில் வளாகத்தில் பனி கொட்டும் அழகிய சூழலில் நடந்து வரும் காட்சிகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. மணப்பெண் தனது சிவப்பு நிற லெஹங்கா நனையாதபடி கவனமாக நடந்து வர, பின்னால் இருப்பவர்கள் அவருக்கு உதவி செய்கின்றனர். உறைய வைக்கும் குளிரிலும் அந்தத் தம்பதியின் முகத்தில் வழிந்த புன்னகை, அந்தத் திருமணத்தை ஒரு தேவதைக் கதை போல மாற்றியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by mahendrasemwal (@mahendrasemwal1)

“>

இந்நிலையில் இந்த மனதைக் கவரும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த பலரும், “வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்” என்றும், “இறைவனின் ஆசீர்வாதம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது” என்றும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். திரியுகிநாராயண் கோவிலில் எரியும் அணையாத ஜோடியைப் போலவே, இவர்களின் இல்லற வாழ்வும் ஒளிர வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.