இன்றைய காலக்கட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் இளைஞர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்கிறது. அந்த வகையில் வைரலாகி வரும் வீடியோவில், ரயிலில் இருந்து இறங்கும் இளம்பெண் ஒருவர், பிளாட்பாரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்தும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘தீவானி மே தீவானி’ என்ற பாடலுக்கு குதித்து குதித்து வினோதமாக டான்ஸ் ஆடுகிறார்.

அவரைச் சுற்றி இருக்கும் பயணிகள், “என்ன நடக்கிறது இங்கே?” என்பது போல மிரட்சியுடன் பார்க்கின்றனர். இந்த வீடியோ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ரயில்வே நிர்வாகம் இவர்களைப் போன்ற ரீல்ஸ் பேர்வழிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்” என்றும், “ரயிலில் அபாயச் சங்கிலி இருப்பதைப் போல, இவர்களை அடக்க ‘அவசர அடி’ திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கிண்டலாகவும் கோபமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.