சென்னை பெரும்பாக்கம் பகுதியில் நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு குடியிருப்பு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு ஆணின் சடலம் கடந்த 19ஆம் தேதி மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது பழனிச்சாமி என்பது தெரியவந்தது. அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
அதாவது பழனிசாமி கணவனை இழந்த வீரலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் சிலிண்டர் போடும் வேலை செய்து வரும் பழனிசாமி உறவுக்கார பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக வீரலட்சுமி வீட்டிற்கு அவர் வருவதில்லை. அவர் தன் முதல் மனைவியை பிரிந்த நிலையில் வீரலட்சுமிக்கு அசோக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இது பற்றி பழனிசாமிக்கு தெரிய வரவே அவர்தான் மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதோடு அவர் வீரலட்சுமியை கடுமையாக தாக்கவும் செய்துள்ளார். இது தொடர்பாக வீரலட்சுமி அசோக்குமாரிடம் கூறிய நிலையில் உன் கணவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பு அடுத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்படி வீட்டை வீரலட்சுமி பூட்டிய நிலையில் பழனிசாமி வெளியே படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த அசோக்குமார் அவரது தலையில் கல்லை போட்டுக்கொன்று பின்னர் பிணத்தை அங்கு வீசி சென்றுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வீரலட்சுமி மற்றும் அசோக்குமார் கைது செய்துள்ளனர்.
