இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சிலிண்டர் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது சிலிண்டர் பயனர்கள் மோசடியில் குறி வைக்கப்பட்டுள்ளனர்.

நிறைய பேருக்கு அவர்களுடைய சிலிண்டர் இணைப்பு பில் செலுத்தப்படவில்லை என எஸ் எம் எஸ் வருகின்றது. மேலும் சிலிண்டர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அச்சுறுத்தப்படுகிறது. அந்த மெசேஜில் உங்களுடைய இணைப்பை புதுப்பிக்க இந்த நம்பருக்கு கால் செய்யவும் என்று ஒரு எண் கொடுக்கப்படுகின்றது. இது முற்றிலும் பணம் பறிக்கும் செயல் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு இது போன்ற மெசேஜ் வந்தால் அதனை தவிர்த்து விடவும்.