அமெரிக்க அரசியலை கலக்கியுள்ள பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இடம்பெற்றுள்ளதாக எலான் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்க, தற்போது ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து கடிதம் மத்தியிலும் டிரம்ப் அடித்துச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த கடிதம் 2003-ஆம் ஆண்டு எப்ஸ்டீன் பிறந்த நாளுக்காக, அவரது நெருங்கியவர் கிஸ்லைன் மேக்ஸ்வெல் தொகுத்த ஆல்பத்தில் இடம்பெற்றதாகவும், ஒரு நிர்வாண பெண்ணின் வரைபடம் கொண்ட காகிதத்தில் டிரம்ப் தட்டச்சு செய்த வாழ்த்து சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அந்தக் கடிதத்தில் டிரம்பின் கையெழுத்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இதைத் திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், இது தன்னால் எழுதப்பட்ட கடிதமல்ல, அவனுடைய வார்த்தைகள் அல்ல, என்றும், ரூபர்ட் முர்டோக் தலைமையிலான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தனது பெயரையும் மதிப்பையும் சேதப்படுத்தியதற்காக 10 பில்லியன் டாலர் (அறுபத்து எட்டு ஆயிரம் கோடி ரூபாய்) மானநஷ்டத்துடன், அந்த நாளிதழ் மீது டிரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது, இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் சூடான விவாதமாக வளர்ந்து வருகிறது.
