அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்பட்டதிலிருந்து, சட்டவிரோத குடியேறல்கள் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், வணிக விமானம் வழியாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், இந்த ஆண்டு ஜூலை 15 வரை, அமெரிக்கா இருந்து மொத்தம் 1,563 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர், கை விலங்கிட்டு விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அமெரிக்க செய்தி தொடர்பாளர் ரந்தீஷ் ஜெய்ஸ்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வந்த கடுமையான குடியேற்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், மொத்தம் 15,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியா திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலைமைகள் இந்திய குடியரசுத் துறையிலும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
