மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் ரெத்யகேடா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி கொடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளார். இந்த கொடூர சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மூதாட்டியின் மகன் மற்றும் மருமகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி வீட்டிற்கு திரும்பினர். அப்போது மூதாட்டி இருந்த நிலைமையை பார்த்து அவர்கள் மிகுந்த அதிர்ச்சிகுள்ளாகினர். பின்னர் அவர்கள் மூதாட்டியிடம் விசாரித்தபோது அக்கம்பக்கத்தினர் அந்த மூதாட்டியை பிடித்து கட்டையால் அடித்து துன்புறுத்தியதோடு சூடான இரும்பு கம்பியால் சூடு வைத்ததும் தெரிய வந்தது.

அதோடு அந்த மூதாட்டியை சிறுநீரை குடிக்குமாறு வற்புறுத்தியதோடு நாய் மலத்தை சாப்பிடுமாறும் துன்புறுத்தியுள்ளனர். அதோட கழுத்தில் செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக மூதாட்டியை அழைத்து சென்றுள்ளனர். அந்த மூதாட்டி சூனியம் வைத்ததாக சந்தேகப்பட்டு இப்படி அவர்கள் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி கொடுத்துள்ளனர்.