தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் அடித்ததாக அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது. குழந்தைகளின் பேவரேட் ஹீரோவாக மாறி உள்ள சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மெரினா திரைப்படத்தில் திரைப்பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி உள்ளார்.

மாவீரன் மற்றும் அயலான் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சிறிது காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது படம் தொடர்பான அறிவிப்புகள் பட குழுவால் அறிவிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தது ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.