இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் சிறந்த விமான நிறுவனமாக விஸ்தாராவுக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. Skytrax வழங்கக்கூடிய 2023 உலக ஏர்லைன் விருதில் விஸ்தாரா சென்ற வருடத்தை விடவும் 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் வாயிலாக  தொடர்ச்சியாக 2-வது முறையாக உலகின் சிறந்த 20 ஏர்லைன்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய விமான போக்குவரத்து நிறுவனம் எனும் பெருமையை விஸ்தாரா பெற்று உள்ளது.

அதோடு தொடர்ந்து 3-வது ஆண்டாக “இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவின் சிறந்த விமான நிறுவனம்”, 5-வது முறையாக “இந்தியா மற்றும் தெற்காசியாவில் சிறந்த விமான ஊழியர்கள்”, “இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த கேபின் க்ரூ” என தொடர்ந்து 3-வது ஆண்டாகவும், “இந்தியா மற்றும் தெற்காசியாவில் சிறந்த வணிக வகுப்பு விமான நிறுவனம்” 2-வது முறையாகவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.