சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், வங்கதேசத்தில் உள்ள மதரஸா ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் விதம், இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த வீடியோவில், மதரஸா ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சியை வழங்குகிறார். வழக்கமான வகுப்பறை போல அமைதியாக இல்லாமல், ஒரு போர்க்களத்தில் வீரர்களுக்குக் கட்டளையிடுவது போல அவர் சத்தமாகப் பேசுகிறார். அவரே ஆங்கில வார்த்தைகளை உரக்கக் கூற, அவரைத் தொடர்ந்து மாணவர்களும் அதே பாணியில் சத்தமாகத் திருப்பிச் சொல்கிறார்கள்.
Can can’t, can can’t, 🤣
Could couldn’t, Could couldn’t, 😂
Should shouldn’t, Should shouldn’t,🚀
Must mustn’t, Must mustn’t..🤣“English speaking course in Bangladesh.”🔥 pic.twitter.com/wrFOg8GQpc
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) March 9, 2026
ஆசிரியர் ‘கேன்’ (Can), ‘கான்ட்’ (Can’t) என்று கத்த, மாணவர்களும் அதே வேகத்திலும் சத்தத்திலும் அதைத் திருப்பிச் சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து ‘குட்’ (Could), ‘குடண்ட்’ (Couldn’t) என ஆசிரியர் உச்சரிக்க, மாணவர்களும் ஆவேசமாக அதைப் பின்பற்றுகிறார்கள். அந்த ஆசிரியரின் உச்சரிப்பும், அதைத் தொடர்ந்து மாணவர்கள் கத்திக் கத்திப் பயிற்சி எடுக்கும் முறையும் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது.:
இந்த வீடியோவை ‘எக்ஸ்’ (X) தளத்தில் @SurajKrBauddh என்ற கணக்கில் ஒருவர் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது ஆங்கில வகுப்பா அல்லது போருக்கான பயிற்சியா?” என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். “இவ்வளவு கஷ்டப்பட்டு ஆங்கிலம் கற்பதை இதற்கு முன்னால் பார்த்ததில்லை” என்றும் பலர் சிரிப்பை அடக்க முடியாமல் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரையும் சிரிக்க வைத்து வருகிறது.
