தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் திமுகவும், அதிமுகவுமாக எந்த ஒருவரையும் விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்த நடிகர் விஜய், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனம் இப்போது அதிமுக வட்டாரங்களில் பெரும் எதிர்வினையை கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கியத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார்.

ஈபிஎஸை விமர்சிக்க விஜய்க்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் கடுமையாக சாடியுள்ளார். மேலும், “ஆந்திராவில் சிரஞ்சீவி மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி கட்சி தொடங்கினார். ஆனால், கடைசியில் அதனை கலைத்துவிட்டார். அதேபோல் விஜய்க்கும் அதே நிலைதான் வரும். அரசியல் என்பது பேசினால் போதாது, செயல்திறனும், தொண்டர்களின் நம்பிக்கையும் முக்கியம்,” என தாக்கியுள்ளார்.