சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று அனைவரிடத்திலும் அன்பு காட்டும் நாளாக இருக்கும். அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் நாளாக இன்றைய தினம் அமையும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக அமையும். தேவைகள் பூர்த்தியாகும்.

உறவினர்கள் உங்களை மதித்து நடந்து கொள்வார்கள். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சை குறைத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். சகோதர வழியில் நல்லது நடக்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாற்றங்கள் ஏற்படும் நாளாக இருக்கும்.

பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள். கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் பிங்க் நிறம்