கன்னி ராசி அன்பர்களே,

இன்று அபார புத்தி கூர்மையினால் காரியங்களில் வெற்றி ஏற்படும். நல்ல விஷயங்கள் நடந்தேறும். நிதானமாக செயல்படுவது நல்லது. முடிவுகளை தெளிவாக எடுத்து பாருங்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சீரான அளவு பண வரவு கிடைக்கும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்கல் வாங்கல் வேண்டாம்.

எடுத்த காரியத்தை முடித்து விட முடியும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மன குழப்பம் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கவன சிதறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் உறவினர்களின் வருகை இருக்கும்.

பிள்ளைகள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். சொந்த பந்தங்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இன்று நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும். தேவைகள் பூர்த்தியாகும். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். எது சரி எது தவறு என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். குழப்பம் அடைய வேண்டாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்