சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று தயவு செய்து யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். அதிகாலையில் அனுகூலமான செய்தி வரும். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்லது நடக்கும். வரன்கள் வாயில் தேடி வரும். இன்று தொழிலில் எதிர்பார்த்த ஏற்றம் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். தன்னம்பிக்கையுடன் எந்த செயலிலும் ஈடுபடுங்கள் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பாராத இடமாற்றங்கள் ஏற்படலாம். சிக்கல்கள் விலகி சிகரத்தை தொடும் நாள் என்றே சொல்லலாம். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

இன்று மாணவர்கள் துணிந்து எதிலும் ஈடுபடுவீர்கள். கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். உயர்கல்வி சிறப்பாக அமையும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஆறு, ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்