செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காகக் கூட்டணி கட்சிகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களில் பாமகவின் ‘மாம்பழம்’ சின்னமும் இடம்பெற்றுள்ளது. பொதுவாகக் கூட்டணியில் இருக்கும்போது இது சகஜம் என்றாலும், தற்போது பாமகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், “நான் கஷ்டப்பட்டுப் போராடிப் பெற்ற மாம்பழம் சின்னத்தை, உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம்” என்று மிகக் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

​ஏற்கனவே பாமக-வுக்குள் யார் தலைவர்? யாருக்குச் சின்னம் சொந்தம்? என்கிற மோதல் ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அய்யாவின் இந்த அறிக்கை கூட்டணிக்குள்ளேயே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “சின்னத்தை வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்” என்பதுதான் பாமக தரப்பின் ஆதங்கமாக இருக்கிறது. பொதுக்கூட்ட மேடையிலேயே சின்னம் குறித்த சர்ச்சை வெடித்திருப்பது, மதுராந்தகம் அரசியல் களத்தை அப்படியே திக்கென்ற நிலைக்குக் கொண்டு போயிருக்கு!