சென்னையில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பான வழக்கில், நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் சர்புதீன் இன்று (நவ. 21) கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்டாம்ஸ் சாலையில் உள்ள சர்புதீனின் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதைப் விருந்து நடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த உண்மை அம்பலமானது. மேலும், சர்புதீன் நடத்திய இந்தப் போதைப் விருந்தில் பல சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டதாகத் தெரிய வந்துள்ளதால், இந்த விவகாரம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்புதீனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.