கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சுமன் குல்பே, தனது நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகார்களை அடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது, சுமன் குல்பே தனது பயிற்சியாளருடன் காதல் உறவில் இருந்ததாகவும், அவருடன் உடலுறவு கொண்டதாகவும் ஒப்புக்கொண்டார். ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளில் பல முக்கிய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கோர்ட்டில் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுமன் குல்பே ஒரு நோயாளியுடன் உடலுறவு கொண்டதும், மற்ற இரு நோயாளிகளுடன் முறையற்ற நெருக்கமான உறவு வைத்திருந்ததும் நிரூபணமானதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவத் தொழிலில் நெறிமுறைகளை மீறியதாகக் கருதி, அவரது மருத்துவ உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. விசாரணையின்போது, தான் இந்திய கலாசார மதிப்புகளுடன் வளர்க்கப்பட்டவள் என்று கூறிய சுமன், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
