சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாகும்போது அவற்றில் சிலவற்றை பார்க்கும் போது கண்களில் நம்மை அறியாமலேயே கண்ணீர் வந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது மும்பையில் நீரா தோப்பரே என்பவர் வசித்து வருகிறார். இவர் 25 வருடங்களாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு யோகேஷ் என்ற மகன் இருக்கும் நிலையில் தன் மகனை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.
தன் தாயின் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக படித்த யோகேஷ் தற்போது சிஏ தேர்வில் அதாவது பட்டைய கணக்காளர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்வில் வெற்றி பெற்றதும் காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்த தன் தாயாரை பார்க்க வந்தார். அப்போது தன்னுடைய மகனை அந்த அம்மா ர் கட்டி அணைத்து அழுதார். அப்போது அவருடைய மகனும் அழுதுவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோவை மகாராஷ்டிரா அமைச்சர் ரவீந்திர சவான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியீட்டுள்ள நிலையில் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
योगेश, तुझा अभिमान आहे.
डोंबिवली पूर्व येथील गांधीनगर मधील गिरनार मिठाई दुकानाजवळ भाजी विकणाऱ्या ठोंबरे मावशींचा मुलगा योगेश चार्टर्ड अकाऊंटंट (C.A.) झाला.
निश्चय, मेहनत आणि परिश्रमांच्या बळावर योगेशने खडतर परिस्थितीशी तोंड देत हे दैदीप्यमान यश मिळवलं आहे. त्याच्या या… pic.twitter.com/Mf8nLV4E61
— Ravindra Chavan (@RaviDadaChavan) July 14, 2024
