கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே கோண்டன் குளங்கரா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் வாணி சோமசேகரன் என்ற 24 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் படிக்கும் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று வேகமாக வாணி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவருக்கு விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமாநிலைக்கு சென்று விட்டார். கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு மேலாக அவர் கோமா நிலையில் இருந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கினார். ஆனால் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.