குஜராத் மாநிலத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 30 ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இது தொடர்பாக அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதாவது தன்னுடைய மருமகள் தொந்தரவு கொடுத்ததால் தான் மகன் தற்கொலை செய்து கொண்டதாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்த சுரேஷின் செல்போனை பார்த்தனர். அப்போது தன்னுடைய மனைவி ஜெயா தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார். என்னை மனரீதியாக கொடுமைப்படுத்தி அவர்தான் தற்கொலைக்கு தள்ளினார். அவருக்கு ஒரு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று ஒரு வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முன்னதாக பெங்களூரில் மனைவி டார்ச்சர் செய்ததால் அதுல் சுபாஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், காவலர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். சமீபத்தில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் புனீத் குரோனா என்பவர் தன்னுடைய மனைவி தொடர்ந்து டார்ச்சர் செய்வதாகவும் தன்னால் சித்திரவதை தாங்க முடியவில்லை எனவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் வீடியோ வெளியிட்டு உயிரிழந்தார். சமீப காலமாக மனைவி தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அதே போன்று அரங்கேறியுள்ளது.
